Wednesday, January 26, 2011

Fwd: [♥] படங்களும் கவிதைகளும்



படங்களும் கவிதைகளும் 



புன்னகை செய்!
~~~~~o~0~o~~~~~
வானத்தில் வண்ணவில்,
வயக்காட்டில் நிறைந்த நெல்மணிகள்,
குழந்தையின் சிரிப்பு,
பழுத்து உதிரும் இலை,
இவையாவும் கடக்கும்போது
இதழோரத்தில் புன்னகை செய்!




நடந்து பழகு
~~~~~o~0~o~~~~~
மடியின் கணினியில் உலகமும்
கையடக்க பேசியில் சுற்றமும்
குளிரூட்டி அறையில் வானமும்
சுருங்கிப் போன வாழ்க்கையில்
நண்பனுடன் சுகமாய் முப்பது
நிமிடமாவது நடந்தால் நன்று!




பத்துநிமிடம்
~~~o~0~o~~~
அடர்ந்த வாகனப் புகையும்
அடங்காத நகர ஒலியும்
நீர்த்துப் போகும்
நீண்ட புல்வெளியில்
பத்து நிமிடமாவது
படுத்துக்கிட, பசுமையான நினைவுகளோடு!



நினைவிலிட்டுக்கொள்
~~~o~0~o~~~
பகலவனின் கதிர்கள்
பாதம் உரசும்முன்
விழித்தெழுந்து
விண்ணில் மறையவிருக்கும்
விண்மீன்களுக்கு வணக்கம்
சொல்லிவிட்டு இன்றைய
செயல்களை நினைவிலிட்டுக்கொள்!




நம்பிக்கை
~~o~0~o~~
நண்பர்களும்
நம்பிக்கையும் போதுமே
துள்ளிக் குதித்து
தூவானம் தூவும்
முகில் மேல் ஏற!



புண்ணியமாகட்டும்
~~~o~0~o~~~
புன்னகை பூக்கும்
பூவிதழ்கள்தோரும்
பெருகிடுமே இன்பங்கள்
அருந்திடுமே துன்பங்கள்
மனிதக் கொடியில்
மடல் விரித்து
கொடியாய்ப் பரவும்
புன்னகைகளால் குளிரட்டும்
புண்ணிய பூமி!



No comments:

Post a Comment