Thursday, March 3, 2011

Fwd: [♥] ‘ஹைக்கூ’



திரைப்படம்!

வெண் திரையும்

வெளிச்சமும்

சேர்ந்ததில் தான்

எத்தனை

விசேஷம்!



எப்படி நிற்கும் விக்கல்!!

உனக்கு விக்கிக்கொண்டே

இருப்பதாய்

என்னிடம்

வேதனைப்படுகிறாய்.

நான்தான் உனை

நினைத்துக்கொண்டே

இருக்கிறேனே..

எப்படி நிற்கும்

உனக்கு வந்த விக்கல்!!



ரோஜாவின் சாபம்!

சிரித்த ரோஜாவை

சிரம் கொய்து

காதல் பரிசென்றாய்.

ரோஜா கொடுத்த

சாபம்தானோ

நம் காதல் தோல்வி!



அறியாமை!

மரத்திலுள்ள

பச்சை இலைகளை

பார்த்து

காய்ந்து உதிர்ந்த

முதிர்ந்த இலைகள்

சிரித்தன..

மரத்தின் பாரத்தை

தாம்

குறைத்ததாய் எண்ணி.


எழுச்சி !

பட்ட மரத்தில்

பச்சை வளர்ந்தது..

எச்சத்தில்

விதையிட்டப் பறவைகள்.


நன்றி 

http://padaipali.wordpress.com/category/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82/
--
--
~....keep in touch....~
9095039609

No comments:

Post a Comment