Monday, November 14, 2011

என் காதல் வார்த்தைகள்.......!!




அன்பே...... 
உன்னை நான் 
மனம் முழுதும் நிறைத்து 
தினம் தினம் 
காதலை சொல்கிறேன் 
கண்ணாடி முன்னாடி போய் நின்னு 
காதலை பெண்கள் சொன்னால் 
தப்பா என என் தோழியரை 
கிண்டல் செய்தேன் அன்றவர்கள் 
காதலின் வயப்பட்டவேளை.... 
இன்றுன் காதல் கண்ணில் 
ஈர்க்கப் பட்டு 
சொல்லமுனைந்து நெருங்கும் வேளை 
நாணம் எனை தடுக்கிறது 
வார்த்தைகள் சிக்கி தவிக்கின்றது 
சிதறும் என் வார்த்தைகள் 
சிறு சீண்டல்கள் 
உன்னைக் காணும் போதுமட்டும் 
விக்கித்துவிடுகிறதே...... 
அப்போதேனும் புரியமாட்டாயா 
என ஏங்குகிறேன் 
கவியில் என் மனத்தைக் கொட்டும் நான் 
உன்னிடம் மட்டும் 
மௌனக் கவி பேசுகிறேன் 
வார்த்தையின் ஜாலங்களை 
விலைக்குக் கொடுத்துவிட்டு வந்தவளாய்.........!!


No comments:

Post a Comment